விபரீத முடிவெடுத்த இளம் பூசகர்.
நோட்டன்பிரிஜ்ஜில் 16 வயதான இளம் பூசகர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தில் இந்துக்கோவிலில் பூசகருக்கு உதவியாளராக செயற்பட்ட இளம் பூசகரே இவ்வாறு செவ்வாய்க்கிழமை (03) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மடுவத்திலேயே அவரது சடலம் இருப்பதாக நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒஸ்போன் தோட்டத்தின் கீழ் பிரிவைச் சேர்ந்த சுந்தரமுல்லன் ஜனநாதன் என்ற இளைஞனே இவ்வாறு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான பூசகர் கோவிலில் இல்லாத சமயத்திலேயே அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டன்பிரிஜ் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.