மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திய நபரால் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த விபரீதம்.
மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்தி சென்ற சாரதி ஒருவர் பொலிஸ் கான்ஸ்டபிளை கத்தியால் தாக்கிக் காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அத்தோடு அச் சாரதியை அலுபோமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோதே பொலிஸ் கான்ஸ்டபிளை கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காயமடைந்த அலுபோமுல்ல பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரிஸ்வத்த பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே இவவறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போக்குவரத்து பிரிவின் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.