இலங்கையில் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் உட்பட 26 பேர் வைத்தியசாலையில்!

இலங்கையில் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் உட்பட 26 பேர் வைத்தியசாலையில்!

புத்தளம் - வென்னப்புவ, மார்ட்டின் வனக் கல்லூரியின் அதிபர் உட்பட 26 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (02-09-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் உட்பட 26 பேர் வைத்தியசாலையில்! நடந்தது என்ன? | Puttalam Wennappuwa Wasp Attack 26 People Hospital

குளவிக் கொட்டுக்கு இலக்கான கல்லூரி அதிபர் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் லுணுவில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் அதிபர், 4 ஆசிரியர்கள் மற்றும் 21 மாணவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் உட்பட 26 பேர் வைத்தியசாலையில்! நடந்தது என்ன? | Puttalam Wennappuwa Wasp Attack 26 People Hospitalஇதேவேளை, 26 பேரும் மேலதிக சிகிச்சைக்காக லுணுவில வைத்தியசாலையிலிருந்து, மாரவில தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பாடசாலைக்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருக்கும் குளவிக் கூட்டிலிருந்து வந்த குளவிகளே இவ்வாறு அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதலை நடத்தியதாக மேலும் தெரியவந்துள்ளது.