வெளிநாட்டில் இருந்து வந்த கணவனால் மனைவிக்கு நேர்ந்த சோகம்.

வெளிநாட்டில் இருந்து வந்த கணவனால் மனைவிக்கு நேர்ந்த சோகம்.

வெல்லவயில் நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் நேற்று (02) காலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் மரலுவாவ பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்த கணவனால் மனைவிக்கு நேர்ந்த சோகம் | Husband Killed Her Wifeஉயிரிழந்த பெண் தனது பிள்ளைகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில் அவரது கணவர் வெளிநாட்டில் இருந்து 02 நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இருவருக்கும் இடையில் குடும்பத்தகராறு முற்றிய நிலையில் கணவன் மனைவியை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டதையடுத்து நீதிமன்றத்தினால் சிறைச்சாலை அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.