கிளிநொச்சியில் வீதியை கடக்க முற்பட்ட முதியவரை மோதி தள்ளியது அரசபேருந்து
கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஏ9 வீதியில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் வீதியை கடக்க முற்பட்டபோது வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி பயணித்த அரச பேருந்து மோதியது.
விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.