கரையோர தொடருந்து சேவை தாமதம்.

கரையோர தொடருந்து சேவை தாமதம்.

கொள்ளுபிட்டி தொடருந்து நிலையத்துக்கு அருகில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கரையோர தொடருந்து சேவை தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹவ பகுதியில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த அலுவலக தொடருந்தே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கரையோர தொடருந்து சேவை தாமதம் | Coastal Train Service Delayed

இதனையடுத்து அப் பகுதியில் ஒரு மார்க்கத்தில் மாத்திரம் தொடருந்து சேவைகள் இடம்பெறுவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் தொடருந்தை தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.