யாழில் இளைஞரை கடத்திச்சென்று தாக்குதல்; மூவர் கைது.

யாழில் இளைஞரை கடத்திச்சென்று தாக்குதல்; மூவர் கைது.

இளைஞனை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று தாக்கி, அவரது பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சனிக்கிழமை வீதியில் சென்ற இளைஞனை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கடத்தி சென்றனர்.

யாழில் இளைஞரை கடத்திச்சென்று தாக்குதல்; மூவர் கைது | Youth Abducted And Attacked In Yaliஆள்நடமாட்டம் அற்ற பகுதிக்கு இளைஞரை கொண்டு சென்று தாக்கி அவரது, கைத்தொலைபேசி மற்றும் மணிக்கூடு என்பவற்றை கொள்ளையடித்து , தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞனால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதன் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மூவரை கைது செய்துள்ளதுடன் , அவர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.