
யாழில் 21 வயதுடைய இளைஞனை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!
யாழ்ப்பாணம் - நெல்லியடி குடவத்தை பிரதேசத்தில் வாளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (24-09-2023) இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் குடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரையே நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூரும் சுவையில் மாங்காய் மோர் குழம்பு
24 March 2025