யாழில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு..!

யாழில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு..!

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் நேற்று(24.09.2023) காலை தோட்டக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

மயிலங்காடு, ஏழாலை பகுதியில் வசித்து வந்த 51 வயதுடைய ஆறுமுகம் துரைராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நபர் நேற்றுமுன்தினம் (23.09.2023) வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் வீடு திரும்பாததையடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு | Man S Body Recovered From Well In Jaffna

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.