யாழில் மூன்று மாத ஆண் குழந்தை பரிதாபமாக மரணம்..!
யாழில் பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் நேற்று முன்தினம் (23.09.2023) இடம்பெற்றுள்ளது.
கிருஷ்ணகுமார் கரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாய் நேற்று முன் தினம் (23.09.2023) காலை குழந்தைக்குப் பாலூட்டிய போது குழந்தை அசைவற்று காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், குழந்தையை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் பால் புரையேறியே குழந்தை உயிரிழந்துள்ளதாக என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.