யாழில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு..!

யாழில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் - தாழையடிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். - தாழையடியைச் சேர்ந்த சின்னையா தனபாலசிங்கம் (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

கடந்த வெள்ளிக்கிழமை (15.09.2023) தாழையடிப் பிரதேசத்தில்  இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மருதங்கேணி கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு | Men Accident Death In Jaffna

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று (21.09.2023) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார்தெரிவித்தனர்.