தன் மீதான துப்பாக்கி சூடு குறித்து உத்திக விரக்தி!

தன் மீதான துப்பாக்கி சூடு குறித்து உத்திக விரக்தி!

நாட்டில் தற்போதுள்ள முறைமை காரணமாகதான் தான் சுடப்பட்டதாக நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (19) தனது கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே உத்திக பிரேமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது உத்திக பிரேமரத்ன மேலும் கூறுகையில்,

Uddika Premarathna

“இந்தச் சம்பவத்தை யார் செய்தார்கள் என்பதை விட, தற்போதுள்ள முறைமையினால்தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று நான் நினைக்கிறேன்.

இந்த முறை தவறு என்று நாம் அனைவரும் அறிவோம், இந்த முறை தவறு என்பது நம் நாட்டு மக்களுக்கும் தெரியும்.

நமது நாட்டின் சமூக அமைப்பு தவறு. அரசியலும் தவறு. அதனால்தான் நாடு இன்று இந்த நிலைக்கு வந்துள்ளது என்றார்.