மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம்..!

மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம்..!

எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்க கூடிய  சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மின்சார சபை சுமார் 5,000 கோடி ரூபாய் நட்டத்தை அடைந்துள்ளதாகவும் இந்த நட்டத்தை ஈடு செய்வதற்காக ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின்சார கட்டணங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்சார கட்டணங்கள் ஆண்டில் இரண்டு தடவைகள் திருத்தி அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம் | Ceb Rate Hike

மக்களுக்கு 24 மணித்தியாலமும் மின்சாரத்தை தடை இன்றி மின்சாரத்தினை  வழங்குவதற்காக தனியார் மற்றும் கூடுதலான விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை மின்சார சபைக்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டதாக மின் பொறியியலாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபை இதுவரையில் மொத்தமாக 500 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.