தடுப்பூசியால் மேலுமொரு மரணம்..!
காலியில் பல்கலைக்கழக மாணவனொருவன் தடுப்பூசி செலுத்தி ஒவ்வாமை ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
காலி – தவலம் ஹல்வித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கசுன் திலார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இளைஞன் கல்லீரலில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனியாகச் சென்ற இளைஞனுக்கு அங்கு ஊசி போடப்பட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊசியை பெற்றுக்கொண்ட 10 நிமிடங்களுக்குள் ஏற்பட்ட சிக்கல்களினால் மகன் உயிரிழந்ததாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மஹரகம வைத்தியசாலையில் , அவ்வாறான சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.