இலங்கையில் 4,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று (15) தங்கத்தின் விலை சுமார் 4,000 ரூபாயினால் அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார்த் தெரு தங்க விற்பனை நிலவரப்படி கடந்த 11ஆம் திகதி 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 398,000 ரூபாயாகக் காணப்பட்டது.
இந்தநிலையில் இன்று 24 கரட் தங்கப் பவுண் 402,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்க விலை நிலவரம்
அத்துடன் கடந்த சனிக்கிழமை 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 366,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் இன்று காலை 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 369,900 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கப் பவுணின் ஒரு கிராமின் விலை 50,250 ரூபாயாகவும் 22 கரட் தங்கப் பவுணின் ஒரு கிராமின் விலை 46,237 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.