வாழைச்சேனையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்..!

வாழைச்சேனையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்..!

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - நாவலடிப் பகுதியில்  இன்று (17.09.2023)இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரின் மனைவி வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த 24 வயதுடைய ஐ.எம்.பர்ஷாத் எனும் குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர், உயிரை மாய்த்துக் கொள்ள போதைவஸ்துப் பாவனையே காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வாழைச்சேனையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் | A Young Family Was Rescued As A Dead Bodyமேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.