தபால் நிலைய ஊழியர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை!
ஹம்பாந்தோட்டை மாவட்ட தபால் நிலைய ஊழியர்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில், உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தபால் நிலைய ஊழியர்கள் மற்றும் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள தபால் திணைக்கள ஊழியர்களுக்கு அவசியமான சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்குட்பட்ட 117 தபால் நிலையங்களுக்குமான சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
முகக்கவசம் மற்றும் கைகளை சுத்தப்படுத்தும் திரவம் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்கள் இவற்றில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.