சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்கள் தொடர்பில் அறிக்கை..!

சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்கள் தொடர்பில் அறிக்கை..!

இலங்கை சுங்கத்தினால் கடந்த 6 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 965 கொள்கலன்கள், தொடர்பில் விசாரணைகள் இன்னும் முழுமைப் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக துறைமுக முனையங்களுக்கு உள்ளும் அல்லது சுங்கப் பரீட்சை முற்றங்களிலும் அவை வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்கள் தொடர்பில் அறிக்கை | Customs Fail Complete Investigation Of Containers

அறிக்கையின்படி விசாரணைகள் மற்றும் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் முடிவடையாதது இந்த நிலைக்கு ஒரு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.