
மோசடியால் கணவருடன் சிக்கிய மனைவி.
போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த குற்றச்சாட்டில், வெளிநாட்டு கணவன் மனைவியுடன் மற்றுமொரு நபரும் வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாயில் தொழில் வழங்குவதாக ஒருவரிடம் இருந்து தலா 7,60,000 ரூபா பெற்றுக்கொண்டு தம்மை ஏமாற்றியதாக இருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குருணாகல் பிரதேசத்தில் இயங்கிவரும் நிறுவனம் ஒன்று சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது, பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தியமை கண்டு பிடிக்கப்பட்டது.
அத்துடன் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்த குற்றச்சாட்டுகளின் கீழ் கணவனையும் மனைவியையும் அவர்களது உறவினர் ஒருவரையும் அதிகாரிகள் அங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்தச் சோதனை நடவடிக்கையின்போது, அதிகாரிகள் 4 கடவுச் சீட்டுக்கள் மற்றும் வெளிநாட்டு தொழில் வழங்குவது தொடர்பான பல ஆவணங்களையும் கண்டுபிடித்தனர்.