ஆதித்யா எல்1 விண்கலம் தொடர்பில் வெளியான தகவல்.
இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
11 ஆயிரத்து 345 கிலோமீற்றர் புவி சுற்றுவட்டப்பாதையில் தற்போது ஆதித்யா விண்கலம் சுற்றி வருகிறது.
விண்கலத்தை அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை இந்த மாதம் 10 ம் திகதி மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2-ம் திகதி முற்பகல் 11.50 க்கு ஆதித்யா எல் 01 விண்கலம் சூரியனை நோக்கி ஏவப்பட்டது.
ஆதித்யா எல் 01 விண்கலம் 4 மாதகால பயணத்தின் பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட சூரியன் பூமிக்கு இடையிலான தூரம் 151 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும்.
சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆதித்யா எல் 1 நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.