மரண வீட்டில் இறுதிச் சடங்கிற்கு உதவி செய்த இளைஞன் பரிதாபமாக பலி! ஊரே சோகத்தில்

மரண வீட்டில் இறுதிச் சடங்கிற்கு உதவி செய்த இளைஞன் பரிதாபமாக பலி! ஊரே சோகத்தில்

மரண வீட்டில் இறுதிச் சடங்கு நடவடிக்கைகளுக்காக கொடி கட்டிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்ம சம்பவம் பலாங்கொட குருபெவிலாகம பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞனின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற உள்ளன.

பலாங்கொடை குருபெவில்லாகம தொதலுஓய பிரதேசத்திலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரண வீடொன்றில் இறுதி சடங்குகளுக்கான வேலைகளை மேற்கொண்டிருந்த 24 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு பரிதாப மரணத்தை தழுவியுள்ளார்.

எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத நேரத்தில் இந்த இளைஞனின் மரணம் நிகழ்ந்துள்ளதால் ஊரே சோகத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.