இருளில் மூழ்கிய இலங்கையின் பல முக்கிய பகுதிகள்!!

இருளில் மூழ்கிய இலங்கையின் பல முக்கிய பகுதிகள்!!

இலங்கை முழுவதும் சுமார் 5 ஆயிரம் நுகர்வோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாதாந்த மின்சாரக் கட்டணத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்தாததன் காரணமாகவே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் மின்சார விநியோகத்தை சீரமைக்குமாறு விண்ணப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதற்கமைய 10% மின்சார இணைப்புகளை மீண்டும் பெறாமல் மக்கள் இருளில் உள்ளனர் என்றும் இலங்கை மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.