கீழே விழுந்து உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன்! பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம்..!

கீழே விழுந்து உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன்! பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம்..!

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் விடுதி கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 

இன்று காலை கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த நிலையில் அவரை ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எனினும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதுடன், கட்டிடத்தில் இருந்து மாணவன் வீழ்ந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கீழே விழுந்து உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன்! பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம் | Student At University Of Moratuwa

மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஹோமாகம, தியகமவில் உள்ள தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் 26 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த மாணவர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்ற சந்தேகம் நிலவுவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.