
தேர்தல் கால வாக்குறுதிகளை ஆராய்வதற்கு மதிப்பீட்டு அதிகாரசபை அமைக்கப்படும் : கம்மன்பில!
அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்படுகின்ற தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான தேசிய மதிப்பீட்டு அதிகாரசபை ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“நாங்கள் புதிய யோசனைதிட்டம் ஒன்றை முன்வைத்துள்ளோம். தேர்தல் காலங்களில் அரசியில் கட்சிகள் நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக தேசிய மதிப்பீட்டு அதிகாரசபை ஒன்றைினை ஸ்தாபிக்கவுள்ளோம்.
தேர்தல் காலங்களில் வழங்கப்படும் வாக்குறுதிகளை தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் ஆட்சியாளர்கள் மறந்து செயற்படுகின்றனர்.
எனவே தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் தேசிய மதிப்பீட்டு அதிகார சபையினை ஸ்தாபிப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
இதனூடாக அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும். என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்