சுகாதார நடைமுறைகள் தொடர்பில் வேட்பாளர்களுடன் விசேட கலந்துரையாடல்!

சுகாதார நடைமுறைகள் தொடர்பில் வேட்பாளர்களுடன் விசேட கலந்துரையாடல்!

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடல் இன்று மதியம் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றிருந்தது.

இதன் போது வவுனியா பிரதி பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் எம்.மகேந்திரன் கலந்து கொண்டு சுகாதார நடைமுறைகள் தொடர்பாக கருத்துரையினை வழங்கினார்.

தேர்தல் கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாக சென்று பிரச்சாரங்களை மேற்கொள்ளல், வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்தல், வாக்கெண்ணும் நிலையங்களின் செயற்பாடுகளின்போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதுடன் சுகாதார நடைமுறைகள் தொடர்பான அறிவித்தல் உள்ளடங்கிய கையேடுகளும் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

குறித்த கலந்துரையாடலில் வேட்பாளர்கள் , அரச அதிகாரிகள் , பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.