கைதிக்கு தொலைபேசி வழங்கிய அதிகாரி கைது! யாழ். சிறைச்சாலையில் நடந்த சம்பவம்..!

கைதிக்கு தொலைபேசி வழங்கிய அதிகாரி கைது! யாழ். சிறைச்சாலையில் நடந்த சம்பவம்..!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் நடைபெற்ற சோதனையில் தொலைபேசி ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டது.

 

கைதிக்கு தொலைபேசி வழங்கிய அதிகாரி கைது! யாழ். சிறைச்சாலையில் நடந்த சம்பவம் | Phone Jaffna Jail Prisoner Arrested

சிசிடிவி கண்காணிப்பு கமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேக நபர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளார்.