யாழில் அரங்கேறிய மோசமான சம்பவம்; பின்னனியில் புலம்பெயர் நபரா!

யாழில் அரங்கேறிய மோசமான சம்பவம்; பின்னனியில் புலம்பெயர் நபரா!

 யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அந்த தாக்குதலுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளாதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீதே இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழில் அரங்கேறிய மோசமான சம்பவம்; பின்னனியில் புலம்பெயர் நபரா! | Attack On Government Employee S House Injaffnaபெண்களின் ஆடை அணிந்து வந்த ஒருவர் உட்பட்ட ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலே அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழில் அரங்கேறிய மோசமான சம்பவம்; பின்னனியில் புலம்பெயர் நபரா! | Attack On Government Employee S House Injaffnaஇதன்போது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன் யன்னல் கண்ணாடிகள், கண்காணிப்பு கமராக்கள் என்பனவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

யாழில் அரங்கேறிய மோசமான சம்பவம்; பின்னனியில் புலம்பெயர் நபரா! | Attack On Government Employee S House Injaffnaசம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு கோப்பாய் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

யாழில் அரங்கேறிய மோசமான சம்பவம்; பின்னனியில் புலம்பெயர் நபரா! | Attack On Government Employee S House Injaffnaவெளிநாட்டில் உள்ள தரப்பே இங்குள்ள வன்முறை கும்பலுக்கு பணம் அனுப்பி குறித்த வன்முறையில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழில் அரங்கேறிய மோசமான சம்பவம்; பின்னனியில் புலம்பெயர் நபரா! | Attack On Government Employee S House Injaffnaஅதேவேளை கல்வியங்காட்டில் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பப்பட்டு பல்வேறு வன்முறை சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றபோதும் குற்றவாளிகளோ? வன்முறைக் கும்பலோ? இதுவரை கைது செய்யப்படுவதில்லை என  பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

யாழில் அரங்கேறிய மோசமான சம்பவம்; பின்னனியில் புலம்பெயர் நபரா! | Attack On Government Employee S House Injaffna