யாழில் விபத்து! பெண் ஒருவர் பலி.

யாழில் விபத்து! பெண் ஒருவர் பலி.

யாழ்ப்பாணம் - கோப்பாய் சந்தியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் தெற்கைச் சேர்ந்த கௌரிமலர்(52 வயது) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கோப்பை சந்தி சமிஞ்சை விளக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற கோப்பாய் சந்தியில், வீதி சமிஞ்சை விளக்கு ஒளிர்ந்த பின்னும் கட்டுப்பாட்டை மீறி டிப்பர் வாகனம் பயணித்ததாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் விபத்து! பெண் ஒருவர் பலி(Photo) | A Samurthi Manager Was Injured In The Accident

இந்நிலையில் தற்போது அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயம் அடைந்த பெண் கோப்பாய் சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடியுள்ளதால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.