யாழ்.வடமராட்சி களப்பு குடிநீர் திட்டத்தின் பரீசார்த்த நிகழ்வு இன்று
நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான விளக்களிக்கும் கூட்டம் தென்மராட்சி சரசாலை வடக்கில் அமைந்துள்ள நீர்பாசன திணைக்களத்தின் திட்டப் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், கைத்தொழில், கால்நடை அபிவிருத்தி,நீர்ப்பாசனம்,மீன்பிடி, நீரியல்வள அமைச்சர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வட மாகாண பிரதம செயலர் அ.பத்திநாதன், மேலதிக அரசாங்க அதிபர் முரளி, நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதற்கான அடிக்கல்லை 2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.