யாழில் இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிழப்பு.

யாழில் இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிழப்பு.

யாழில் இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் அருகே இவ் விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று (13) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிழப்பு | School Student Died In An Accident At Jaffnaமாட்டு வண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச்சென்ற கனரக லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

இவ் விபத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் கண்டுவில் வீதி சாவகச்சேரியை சேர்ந்த 19 வயதான சிவபாலன் பிரவீன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த மாணவனின் சடலம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிழப்பு | School Student Died In An Accident At Jaffna