யாழை சேர்ந்த மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை.

யாழை சேர்ந்த மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை.

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற UCMAS National championship 2023 போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் முதலிடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று (12) இடம்பெற்ற போட்டியில் சுதர்சன் அருணன் என்ற சிறுவனே அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

யாழை சேர்ந்த மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை | Jaffna Student Achieved First Place In Sri Lanka

இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆரம்ப பாடசாலையில் முதலாம் தரத்தில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதனை புரிந்து, யாழ்ப்பாண மண்ணிற்கும் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை தேடித்தந்த சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.