யாழில் நிலவும் கடும் வெப்பதால் ஒருவர் பலி!

யாழில் நிலவும் கடும் வெப்பதால் ஒருவர் பலி!

 யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக ஒருவர் வியாழக்கிழமை (10) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழில் நிலவும் கடும் வெப்பதால் ஒருவர் பலி! | One Person Died Due To Extreme Heatவீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் காணப்பட்ட நபரை வீட்டார் மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக குருதி ஓட்ட குறைவினால் மரணம் சம்பவித்துள்ளதாக ன அறிக்கையிடப்பட்டுள்ளது. 

அதேவேளை நாட்டின் பல மாகாணங்களில் கடும் வரட்சி நிலவிவரும் நிலையில்  வட பிராந்தியமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையங்களின் அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.