பிரசவித்த குழந்தையை புதைத்த தாய்...! தொடரும் விசாரணைகள்

பிரசவித்த குழந்தையை புதைத்த தாய்...! தொடரும் விசாரணைகள்

பிரசவித்த குழந்தையை  புதைத்து விட்டு அறியாதவள் போல் இருந்த தாய் தொடர்பில் எமக்கு அறிய கிடைத்தது.

ஹட்டன் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தினை ஹட்டன் தலைமை நீதவான் முன்னிலையில் மீட்டெடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதை அடுத்து 15 நாட்களுக்கு முன்னர் இந்த சடலம் புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் குறித்த குழந்தையை பிரசவித்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்த பெண்ணிற்கு ஏற்கனவே 20 வயதுடைய குழந்தை ஆண் குழந்தை ஒன்றும் 16 வயதுடைய பெண் குழந்தை ஒன்றும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.