யாழ் பிரபல பாடசாலையில் அரங்கேறிய சம்பவம்; அதிபரின் செயலால் அதிர்ச்சி!
இலங்கை முழுவதும் எல்நினோ தாக்கத்தின் காரணமாக வெப்பமான வானிலை நிலவி வருகின்றது..
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வழமைக்கு மாறாக பகலில் வெப்பநிலை அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.
மேற்பரப்பு நீர் நிலைகளின் ஆவியாக்க அளவு மாத சராசரியை விட 26% உயர்வாக காணப்படுகின்றது.
இதன் காரணமாக சகல பிரதேசங்களிலும் நீர்ப்பற்றாக்குறை நிலவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றது.
இந்நிலையில் யாழ்.தெல்லிப்பழையில் அமைந்துள்ள பிரபல பாடசாலையின் அதிபர் மனிதாபிமானமற்ற நிலையில் செயற்பட்டுள்ளார்.
அதிபர் நேற்று முன்தினம் (07.08.2023) கடும் வெய்யிலில் உயர்தர மாணவர்களை பாடசாலை நேரம் முழுவதும் கட்டிடத்திற்கு வெளியில் நிறுத்தி வைத்து தண்டனை வழங்கியுள்ளார்.
இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட போது கூட்டத்திற்கு சமூகமளிக்காத பெற்றோர்களின் பிள்ளைகளே இவ்வாறு அதிபரால் தண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.