நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் இதற்கு தடை!
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவ பெரும் திருவிழா ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாவில் சிறுவர்களை வைத்து சாகச நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நல்லூர் திருவிழா காலங்களில் ட்ரோன் கேமராக்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி திங்கட்கிழமை 2023 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சப பெருவிழா இடம்பெறவுள்ளது.