கைதிக்கு சுருட்டு பார்சல் கொடுத்த வைத்தியருக்கு சிக்கல்..!

கைதிக்கு சுருட்டு பார்சல் கொடுத்த வைத்தியருக்கு சிக்கல்..!

அங்குனகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட வைத்தியர் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பொதியை கைதி ஒருவருக்கு வழங்கியுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளை சோதனை செய்த போது, ​​கைதி ஒருவரிடம் 20 சுருட்டுகள் அடங்கிய பொதி இருப்பதைக் கண்டுபிடித்து விசாரித்த போது, ​​சிறை வைத்தியர் சுருட்டு பொதியை ஒருவரிடம் கொடுக்க சொல்லி கொடுத்ததாக கைதி கூறியுள்ளார். 

பின்னர் சிறைச்சாலை அத்தியட்சகர் வைத்தியரை அழைத்து விசாரித்த போது தான் கொடுத்ததாக வைத்தியர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த மருத்துவர் கடந்த 03ஆம் திகதி முதல் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, சிறைச்சாலை தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட உள்ளது