கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து பாரிய விபத்து - முற்றாக சேதமடைந்த கனரக வாகனம்..!
பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தொன்று மீரிகம வில்வத்த பகுதியில் கனரக வாகனமொன்றுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று(09) காலை இடம்பெற்றுள்ளது.
தொடருந்தில் மோதிய கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் தொடருந்து சமிக்ஞை, மின்கம்பங்கள் மற்றும் தொடருந்து கதவுகள் என்பன பலத்த சேதம் அடைந்துள்ளதாக என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த விபத்தால், தொடருந்தின் சக்கரங்கள் மற்றும் என்ஜின் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரதான பாதையில் தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் பல தொடருந்துகள் தாமதமாக புறப்படுவதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.







