யாழில் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய ஆறு இளைஞர்கள் கைது!

யாழில் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய ஆறு இளைஞர்கள் கைது!

 யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மதுவரித்திணைக்களப் பொறுப் பதிகாரியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை அதி காலை ஒரு மணியளவில் கீரிமலை கருகம்பனையில் இடம்பெற்றுள்ளது.

யாழில் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய ஆறு இளைஞர்கள் கைது! | Six Youths Arrested For Bomb Attack In Jaffna

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீட்டின் கதவைக் கொத்தி உடைக்க முயற்சி மேற்கொண்டபோதிலும் அது கைகூடாததால் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, பின்னர் பெற்றோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

ஜன்னல் ஊடாக வீசப்பட்ட குண்டால், அங்கிருந்த 'சோபாசெற்' எரிந்த நிலையில் சேதமாகியுள்ளது.

மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.