ஐரோப்பிய நாடு ஒன்றில் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள நிவாரணம்

ஐரோப்பிய நாடு ஒன்றில் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள நிவாரணம்

இத்தாலியில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு, அந்நாட்டு அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பின் நன்மையை பெற்றுக்கொடுப்பதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை பணியாளர்கள் முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கை வெளிநாட்டு கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் பணியாளர்களிடம் ஆவணங்கள் இல்லாமையினால் அறவிடப்படும் அபராதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த அபராத பணத்தை 420 யூரோவில் இருந்து 140 யூரோ வரை குறைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் மூலம் தற்போது இத்தாலியில் தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்கள் 20000 பேருக்கு நன்மை கிடைக்கவுள்ளது.

அவர்கள் கடவுச்சீட்டு பெற்றுக் கொண்ட பின்னர் இத்தாலியில் பணியாற்றுவதற்காக விசா பெறுவதற்கு விண்ணபிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.