அரந்தலாவை 33 பிக்குமார் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்! ஸ்ரீலங்காவின் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரந்தலாவை 33 பிக்குமார் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்! ஸ்ரீலங்காவின் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரந்தலாவை 33 பிக்குமார் படுகொலையின்போது கடும் காயங்களுடன் தப்பிய பிக்கு ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைமீறல் மனுவின் விசாரணை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்காவின் உயர்நீதிமன்றம் இந்த தீர்மானத்தை இன்று அறிவித்துள்ளது.

கடந்த 1987ஆம் ஆண்டு அரந்தலாவை 33 பிக்குமார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் காயங்களுடன் தப்பிய ஒருவர் அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த படுகொலையில் தொடர்புடைய தற்போது உயிருடன் இருக்கும் தீவிரவாதிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று கோரி அன்டௌல்பத்த புத்தசார என்ற பிக்குவே மனுவை தாக்கல் செய்துள்ளார்

மனுவில் செயல் காவல்துறை அதிபர், அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.