தலைக்கவசத்தால் தாக்கி குடும்பஸ்தர் படுகொலை.

தலைக்கவசத்தால் தாக்கி குடும்பஸ்தர் படுகொலை.

தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நுவரெலியா - கந்தப்பளையில் நேற்று (25.07.2023) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தப்பளையைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இதன்போது உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தலைக்கவசத்தால் தாக்கி குடும்பஸ்தர் படுகொலை | Men Death In Murder By Family Member

உயிரிழந்த நபரின் சகோதரரின் இரண்டு மகன்களே மதுபோதையில் வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த இருவரையும் கைது செய்வதற்குப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.