படகுப்பாதையில் பயணித்த அரச ஊழியர்கள் மீது நிறை போதையில் தாக்குதல் - யாழில் சம்பவம்.
யாழ், காரைநகர் - ஊர்காவற்துறைக்கு இடையிலான படகுப்பாதை சேவையின் பாதைப் பணியாளர்கள் நிறை போதையில் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காரைநகர் - ஊர்காவற்துறைக்கு இடையிலான படகுப்பாதை சேவையானது கடந்த மாதங்களாக நிறுத்தப்பட்ட நிலையில் இந்த மதம் 10 திகதி மீள ஆரம்பிக்கப்பட்டது.

இந்த படகுப்பாதை சேவையை,வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இலவசமாக நடாத்தி வருகின்றனர்.
இச்சேவையால், உத்தியோகஸ்தர்கள், நீதிமன்றம் செல்வோர், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் பயன் பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், குறித்த படகு சேவையின் பாதைப் பணியாளர்கள் நிறை போதையில், அதில் பயணித்த அரச ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
