வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்! நீண்ட வரிசைகளில் நிற்கும் மக்கள்.

வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்! நீண்ட வரிசைகளில் நிற்கும் மக்கள்.

இலங்கையில் பல பகுதிகளில் சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“அஸ்வெசும” நலன்புரி வேலைத்திட்டத்தின் மூலம் கடந்த ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வருவதுடன், கொடுப்பனவுகள் பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் ஜனாதிபதி அலுவலகம் முன்னதாக அறிவித்திருந்தது.

வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்! நீண்ட வரிசைகளில் நிற்கும் மக்கள் | Welfare Allowance By Government Sri Lanka

இந்த நிலையில் இத்திட்டத்தில் பலர் நிராகரிக்கப்பட்டிருந்த காரணத்தால் முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்கப்பட்டு நியாயமான முறையில் பயனாளிகளை உள்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.

முதற்கட்டமாக பயனாளிகளுக்கு விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

பின்பு அவர்களின் தகவல்களை சரிபார்ப்பதற்காக வீடுகளுக்குச் சென்று தரவு சேகரிப்பு செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.

வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்! நீண்ட வரிசைகளில் நிற்கும் மக்கள் | Welfare Allowance By Government Sri Lankaஇதனை தொடர்ந்து மேன்முறையீடுகள் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இவ்வாறான சூழலில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் நன்மையை பெறுவதற்குத் தேவையான வங்கிக் கணக்குகளை திறப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் தற்போது நீண்ட வரிசைகளை காண முடிவதாக கூறப்படுகிறது.