யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

உடுப்பிட்டி வடக்கு கம்பர் மலை பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைதானவரிடமிருந்து ஒரு கிராம் 960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டது.

விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் நெல்லியடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.