யானையின் தாக்குதலில் இருவர் பரிதாப சாவு!

யானையின் தாக்குதலில் இருவர் பரிதாப சாவு!

காட்டுயானை தாக்குதலுக்கு உள்ளான ஏழு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் தலாவ பிரதேசத்தில் நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் இந்த பெண் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

தாக்குதலில் பெண்ணின் இரண்டு கால்களும் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சூரியவெவ வெலிவெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகிய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.