தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் பேருந்து - 15 பேர் வைத்தியசாலையில்...

தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் பேருந்து - 15 பேர் வைத்தியசாலையில்...

தெமோதரை பகுதியில்  தனியார் பயணிகள் பேருந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

தெமோதரை நீர் விநியோக சபைக்கு அருகில் இன்று (15) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் பேருந்து - 15 பேர் வைத்தியசாலையில்.. | Bus Topples Injuring 15 Passengers In Demodara

இந்த விபத்தின் காரணமாக பேருந்து முற்றாக தலைகீழாக கவிழ்ந்துள்ளதுடன் விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணித்த 15 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எல்ல காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.