அதிகார துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தரின் பதவி பறிப்பு..!

அதிகார துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தரின் பதவி பறிப்பு..!

கொழும்பை அண்மித்த பகுதியில் உள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தெகிவளையில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது பதவியின் அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்தி, அத்திடிய பாதுகாக்கப்பட்ட வனாந்திரப் பகுதியில் கட்டுமானப் பொருட்களின் பாகங்களை அப்புறப்படுத்தியுள்ளார்.

இந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு சொந்தமானது என கூறப்படும் உழவு இயந்திரத்தில் வேறொரு சாரதி மற்றும் உதவியாளரைக் கொண்டு குறித்த கட்டுமானக்கழிவுகளை அவர் பாதுகாக்கப்பட்ட வனாந்திரப் பிரதேசத்தில் கொட்டியுள்ளார்.

அதிகார துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தரின் பதவி பறிப்பு | Sri Lanka Police

இதன்போது, ​​உழவு இயந்திரத்தை ஓட்டிச் சென்ற சாரதி மற்றும் உதவியாளர் சந்தேகத்தின் பேரில் வனவளங்கள் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சாரதியிடம், உழவு இயந்திரத்தின் உரிமையாளரான தன்னிடமிருந்து இயந்திரம் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டதாக வாக்குமூலம் அளிக்குமாறு பொலிஸ் உத்தியோகத்தர் அச்சுறுத்தியுள்ளார். 

சம்பவம் குறித்து உழவு இயந்திரத்தின் சாரதி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தப்பட்டதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.