மனைவியை உலக்கையால் தாக்கி கொலை செய்த கணவர்! வெளியான காரணம்.

மனைவியை உலக்கையால் தாக்கி கொலை செய்த கணவர்! வெளியான காரணம்.

புத்தளம் - மாதம்பை பிரதேசத்தில் மனைவியை உலக்கையால் தாக்கி படுகொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (13) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இந்தச் சம்பவத்தில் மரணமடைந்துள்ளார்.

மனைவியை உலக்கையால் தாக்கி கொலை செய்த கணவர்! வெளியான காரணம் | Husband Who Killed His Wife

மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவர், இந்த வெறியாட்டத்தைப் புரிந்துள்ளார் என்று காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான கணவரை கைது செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.