துறைமுக தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு இன்று

துறைமுக தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு இன்று

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளை, துறைமுக அதிகார சபை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று மதியம் 12 மணிக்கு துறைமுகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக துறைமுக அதிகார சபைத் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்று முதல் கருப்பு வாரமொன்றை பிரகடனப்படுத்துவதற்கு தயாராகவுள்ளதாக தொழிற்சங்கத்தின் தலைவர் லால் பங்கமுவ தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதாக உறுதியளிக்கும் வரை இந்த எதிர்ப்பு நடவடிக்கை தொடரும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விடயத்தை முன்னிறுத்தி துறைமுக ஊழியர்களினால் இதற்கு முன்னர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது