யாழ்ப்பாணத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு..!

யாழ்ப்பாணத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு..!

யாழ்ப்பாணம், கைதடி - தச்சந்தோப்பு பகுதியில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தனியாருக்கு சொந்தமான காணியில் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இன்றையதினம் (08) காணியின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும் போது மோட்டார் குண்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery